ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் விபத்து.. இளைஞர் பலி

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில், வீட்டைப் போன்ற கலை அலங்காரப் (Set work) பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் 28 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி