நாவல் பழம் மற்றும் நெல்லிக்காய் போன்ற பழங்கள் புற்றுநோயை தடுக்கும் சிறந்த ஆற்றலை கொண்டுள்ளன. இவற்றில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செல்கள் பாதிப்படைவதை தடுத்து ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. எனவே, அதிக பணம் செலவழித்து வெளிநாட்டு பழங்களை வாங்குவதை விட, நம் ஊர் பருவகால பழங்களை உண்பதே ஆரோக்கியத்திற்கும் பாக்கெட்டிற்கும் நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.