ரூ.3.22 லட்சம் எல்.ஐ.சி. மோசடி: ஓய்வுபெற்ற தபால்காரர் கைது

சென்னையில் எல்.ஐ.சி. பாலிசிதாரர் விஜயகுமாரின் முதிர்வுத் தொகையான ரூ.3.22 லட்சத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்ததாக 2009-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த மணலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்காரர் ராமமூர்த்தியை (64) போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕