மார்ச் முதல் மே மாதம் வரை வட தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலையால் பொது சுகாதாரம், நீர் விநியோகம், மின்சார தேவை, அத்தியாவசிய சேவை பாதிக்கப்படலாம். முதியவர்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் கவனமுடன் இருப்பது அவசியம். அதிகளவில் நீர் அருந்த வேண்டும், வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.