ஆடி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருப்பது சிறப்பான பலன் தரும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், அன்றைய தினம் உப்பு சேர்க்காத உணவு அல்லது பழம், பால் மட்டும் சாப்பிடுவதாலும் விரதம் இருந்த பலனை பெறலாம். ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டில் உள்ள மகாலட்சுமி படத்திற்கு விளக்கேற்றி வழிபடலாம். இவ்வாறு செய்வதால் கடவுளின் அருள் கிடைக்கும் என ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர்.