திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோபால்பட்டியில் அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோவில் ஆடி திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு 100 ஆடுகள் மற்றும் 500 கோழிகள் பலியிடப்பட்டு படையலிடப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ கறி விருந்து வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, இந்த விமர்சையான விருந்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
நன்றி:SunNews