ரயில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயம்

இனி காலை 8 முதல் 10 மணி வரை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப்பில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார் அங்கீகாரம் கட்டாயம். அக்டோபர் 28 முதல் அமல்படுத்தப்பட்ட இந்த விதி, பல கணக்குகள் மூலம் செய்யப்படும் டிக்கெட் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் இணைக்காதோர் 10 மணிக்குப் பிறகு மட்டும் டிக்கெட் பதிவு செய்ய முடியும். ஆன்லைன் பயணிகளுக்கே இது பொருந்தும். கவுன்டரில் மாற்றமில்லை.

தொடர்புடைய செய்தி