ஆதார் குடியுரிமை சான்றாக கருத முடியாது என தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பேசிய அவர், “ஆதார் அட்டையை ஒருபோதும் குடியுரிமைக்கான சான்றாகவோ, வசிப்பிட சான்றாகவோ, பிறந்த தேதிக்கான சான்றிதழாகவோ, வசிப்பிட சான்றிதழாகவோ ஏற்றுக்கொள்ளப்படாது. ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று இல்லை என உச்சநீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது” என்றார்.