குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு இலவசம்

குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 2027 செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5 மற்றும் 15 வயதை அடையும் குழந்தைகளின் கைரேகை, கருவிழி மற்றும் புகைப்பட விவரங்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆதார் மையங்களுக்குச் சென்று இந்தப் புதுப்பிப்பை மேற்கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕