டீ குடிக்க சென்ற இளைஞர் மர்மகும்பலால் வெட்டிக்கொலை

நெல்லை அருகே இன்று காலை வீட்டில் இருந்து டீ கடைக்கு நடந்து சென்ற ஆவுடையப்பன் (38) என்பவரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது. பட்டப்பகலில் நடந்த இக்கொலையால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி