தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது சொகுசு காரை மேம்படுத்துவதற்காக தனது விதைப்பையை சுமார் ரூ.24.5 கோடிக்கு விற்பனை செய்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காரின் மீதுள்ள அதீத மோகத்தால் எடுக்கப்பட்ட இந்த விசித்திரமான முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான ஆதாரமோ அல்லது மருத்துவ தகவலோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.