நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கட்சிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தவெக கொடியுடன் இளைஞர் ஒருவர், நடுரோட்டில் வீலிங் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: Polimer News