மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண் அமைச்சரானார்

மேற்கு வங்கத்தில் வீடுகளில் பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட துப்புரவு பணிகளை செய்து வந்த 37 வயதான கலிதா மாஜி, தற்போது மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவுஸ்கிராம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். எளிய பின்னணியில் இருந்து கடின உழைப்பால் உயர்ந்துள்ள இவரது அரசியல் பயணம், தற்போது நாடு முழுவதும் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி