கர்நாடகா ஹாவேரி மாவட்டத்தில் திருமண மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இரண்டு குழந்தைகளின் தாயான ரேகா என்ற பெண், ரவிச்சந்திரா என்ற இளைஞரை திருமணம் செய்து சுமார் ரூ.2.5 லட்சம் வரதட்சணையாக பெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் தொடர்பு கொண்டதால் மோசடி தெரியவந்தது. தப்பிச் செல்ல முயன்ற ரேகாவை கிராமத்தினர் பிடித்து ஹலகேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.