தவெக தேனி வடக்கு மாவட்ட மகளிரணித் தலைமை எனக் கூறிக்கொண்டு அஜிதா என்பவர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் கார் ஓட்டுவது, ஆட்சியர் நாற்காலியில் அமர்வது போன்ற காட்சிகளைச் சினிமா பாடல்களுடன் அவர் ரீல்ஸாகப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், தவெகவில் அப்படி ஒரு பொறுப்பே இல்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
நன்றி: பாலிமர்