உத்தரப் பிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் திருமண சடங்கின் போது மணமகள் வீட்டுச் நாயை மணமகன் வீட்டார் அடித்ததால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. நாற்காலி, தடிகளால் தாக்கியதில் மணமகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகள், கருணையில்லாத குடும்பத்தில் வாழ முடியாது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தார். போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர்.