நீங்கள் தினமும் மது அருந்துபவர் என்றால், இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். தினமும் மது அருந்துபவர்களுக்கு விரைவில் வயதாகும் அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கூடுதலாக, இது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், வயிற்றுப்புண், ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். மேலும், இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உங்களுக்கு உள்ளது.