மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கணேசபுரம் கிராம மக்கள், கடந்த 5 ஆண்டுகளாக மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து, வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். மேலும், அரசியல் கட்சியினர் யாரும் வாக்கு கேட்டு தங்கள் கிராமத்திற்குள் வரக்கூடாது என தட்டி வைத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். கிராம மக்களின் இந்த திடீர் முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.