ஈரோட்டை சேர்ந்த பிரபு (19) கோவையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். சூப்பர் ஹீரோ வீடியோக்களை பார்த்து வந்த அவர் அது போன்ற சக்தி தனக்கு இருப்பதாக கற்பனை செய்ததோடு அது குறித்து தனது நண்பர்களிடம் சொல்லி வந்தார். இந்நிலையில் இன்று (அக். 29) கல்லூரி விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்த பிரபு கை, கால் முறிந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு