நம்மில் பலர் பூனையை அபசகுணமாக கருதுகிறோம். ஆனால் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெக்லேலே கிராமத்தில் பூனை கடவுளாக கும்பிடப்படுகிறது. பூனைக்கு கோயில் கட்டி வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும் விழாவும் நடத்தப்படுகிறது. இந்த வழக்கத்தை நூறு வருடங்களுக்கு மேலாக கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர். தங்களது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து காக்க, மங்கம்மா என்ற பெண் தெய்வம் பூனை வடிவம் எடுத்ததாக அவர்கள் நம்புகின்றனர்.