'ஆட்சியில் பங்கு பாம் வெடிக்கிறது' - விஜய் அனலுரை

'நான் சொன்ன ஆட்சியில் பங்கு பாம்' அனைத்து கூட்டணியிலும் வெடிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று (பிப்., 13) மக்கள் சந்திப்பில் பேசிய அவர், ஆட்சியில் பங்கு என்று நான் அறிவித்தேன். இப்போது அனைத்து கட்சிகளின் கூட்டணியிலும் அந்த பாம் வெடிக்கிறது. வெல்வோம் ஒன்றாக, அதில் வரும் சலுகைகளை அனுபவிப்போம் நாமாக என்று திமுகவை விமர்சித்தார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியில் பங்கு விவகாரத்தை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி