பீரோவில் பதுங்கியிருந்த ராஜநாகம்.. வைரல் வீடியோ

கேரள மாநிலத்தில், வீட்டிற்குள் நுழைந்த ராஜநாகத்தை வனத்துறையில் பிடித்துச் சென்றனர். கோட்டயம் அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் ராஜநாகம் நுழைந்துள்ளது. அங்குள்ள பீரோவில் அடியில் அந்த நாகம் பதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், பீரோவின் அடியில் பதுங்கி இருந்த ராஜநாகத்தை, பாதுகாப்பாக பிடித்து பையில் போட்டனர். பின்னர், அந்த ராஜநாகத்தை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி