கர்நாடகா: கக்கமாரி கிராமத்தை சேர்ந்த அமித் குருலிங்கா (10) என்ற சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உள்ளே புகுந்த பாம்பு சிறுவனை கடித்தது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்நிலையில் குறித்த பாம்பு 3 நாட்களாக வீட்டிலேயே பதுங்கியிருந்தது. பாம்பை ஒருவழியாக பையில் பிடித்த அமித் குடும்பத்தார் அதை கொல்லாமல் காட்டில் வைத்து விடுவித்தனர்.