ஒரு சிறிய தொப்பி... பறிபோன நீர்யானையின் உயிர்

அமெரிக்காவின் சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், குறைப்பிரசவத்தில் பிறந்து உலக புகழ்பெற்ற 'ஃபியோனா' என்ற 9 வயது நீர்யானை உயிரிழந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிறந்த ஃபியோனா, பார்வையாளர் ஒருவர் தவறுதலாக அதன் இருப்பிடத்திற்குள் தவறவிட்ட சிறிய தொப்பியை விழுங்கியதால் உடல்நல குறைவிற்கு ஆளானது. இதனையடுத்து, கால்நடை மருத்துவர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் சிகிச்சை அளித்தும், ஃபியோனாவை காப்பாற்ற முடியாமல் போனதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் சோகத்துடன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕