அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பமாக அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் வாகனத்தில் போலி நம்பர் பிளேட் இருந்தது அம்பலமாகியுள்ளது. வாகன பதிவெண் பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், 2 நம்பர் பிளேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. TN 01 G 0491 பதிவெண்ணை, TN 63 G 0491 என்ற பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தியுள்ளனர்.