உத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டாவில் ஒரு காதல் ஜோடி பைக்கில் ஆபாசமாகவும் ஆபத்தான முறையிலும் பயணித்த வீடியோ இணையத்தில் தீ போல் பரவி வருகிறது. எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு காதல் ஜோடி ஹெல்மெட் அணியாமல், பைக் டேங்கில் அமர்ந்துகொண்டு ரொமான்ஸ் செய்துகொண்டே உல்லாசமாக பயணித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் கொதித்துப்போன நிலையில், அந்தப் பைக் எண்ணைக் கொண்டு போலீசார் ரூ.53500 அபராதம் விதித்துள்ளது.