நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம் என உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து, அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.