டெல்லியில் வாக்குத் திருட்டுக்கு எதிராகப் போராடும் இந்தியா கூட்டணியில் தவெக இணையாததைச் சாடியுள்ள திமுக எம்பி ஆ.ராசா, பாசிசத்திற்கு வாலாட்டும் ராஜவிசுவாசத்தில் அக்கட்சி செயல்படுவதாக விமர்சித்துள்ளார். மேலும் மதச்சார்பின்மைக்கு உரிமை கொண்டாடும் காங்கிரஸ் கட்சிக்கு சுயமரியாதை போய்விட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இப்போக்கைக் கண்டு காந்தியும் நேருவும் கலங்கி நிற்பதாகவும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.