போக்கோ நிறுவனம் தங்களது புதிய போக்கோ M7 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 10,000 ரூபாய்க்குள் பட்ஜெட் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர், 120Hz அடாப்டிவ் ரிஃப்ரெஷ் ரேட், டூயல் கேமரா செட்டப் அமைந்திருக்கிறது. இதுதான் பெரிய டிஸ்ப்ளேவோடு வேகமாக வேலை செய்யும் 5G போன் என கூறப்படுகிறது.
போக்கோ M7 இந்தியாவில் இரண்டு வேரியண்ட்ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் 9,999 ரூபாய்க்கும், 8GB + 128GB வேரியண்ட் 10,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.