நிலச்சரிவு மற்றும் பேராபத்தை ஏற்படுத்தும் அரிதான இயற்கை நிகழ்வு

மேகவெடிப்பு என்பது மிக குறுகிய காலத்தில், குறிப்பிட்ட ஒரு சிறிய நிலப்பரப்பில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை திடீரென கொட்டி தீர்க்கும் ஒரு அரிதான இயற்கை நிகழ்வாகும். மலைப்பகுதிகளில் ஈரப்பதம் மிக்க மேகங்கள் மலைகளுக்கு இடையே சிக்கி, மேலே செல்ல முடியாமல் திடீரென குளிர்ந்து மொத்த நீரையுமாக ஒரே நேரத்தில் கீழே கொட்டுவதால் இந்த மேகவெடிப்பு ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கையும் நிலச்சரிவையும் ஏற்படுத்தும் இந்த நிகழ்வு, வளிமண்டல அழுத்த மாறுபாடுகளின் காரணமாகவே அதிகம் நிகழ்கிறது.

தொடர்புடைய செய்தி