தென்கிழக்கு ஆசிய காடுகளில் வாழும் அரிய டிராகன் பாம்பு

தென்கிழக்கு ஆசியாவின் அடர்ந்த காடுகளில் காணப்படும் ‘டிராகன் பாம்பு’, புராணங்களில் வரும் டிராகன்களை போன்ற கரடுமுரடான கூர்மையான செதில்களை முதுகில் கொண்ட அபூர்வமான உயிரினமாகும். இந்த விசித்திர பாம்பு மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதுடன், ஆபத்தை உணர்ந்தால் தற்காப்பிற்காக தன் உடலை கட்டை போல் விறைக்க செய்து அசையாமல் உறைந்துவிடும் இயல்புடையது. காலநிலை மாற்றங்களால் அரிதாகி வரும் இந்த டிராகன் பாம்புகள், காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலையை பேண கூடிய முக்கிய உயிரினமாக விளங்குகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕