நெற்றியில் கூர்மையான முடிகளை கொண்ட அரிய வகை பறவை

பிரேசில் நாட்டின் அட்லாண்டிக் காட்டு பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை பறவையான 'ஸ்ட்ரெஸ்மனின் பிரிஸ்டில்ஃபிரண்ட்', நெற்றியில் கூர்மையான முடிகள் கொண்ட தோற்றத்தை கொண்டுள்ளது. சுமார் 20 செ.மீ. நீளமுடைய இப்பறவை, பூச்சிகள் மற்றும் சிறிய உயிரினங்களை உணவாக உட்கொண்டு தரையில் நடமாடி இரை தேடும் இயல்புடையதாகும். காடுகள் அழிக்கப்படுவதால் வாழிடங்களை இழந்து வரும் இந்த இனம், உலகில் 50-க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே எஞ்சியுள்ள மிக அபாயகரமான பறவையாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕