அரக்கோணத்தில் 20 பேரைக் கடித்துக் குதறிய வெறி நாய்

அரக்கோணம் அருகே பாராஞ்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, அவ்வழியாகச் சென்ற பொதுமக்களைத் துரத்தித் துரத்திக் கடித்ததில் 20 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 20 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕