தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (பிப்.13) நடைபெற்றது. 'பொன்னியின் செல்வன் (பாகம்-1)' திரைப்படத்திற்காக தனித்துவமான இசையை வழங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த உயரிய அங்கீகாரத்தை பெற்றுக்கொண்ட ரஹ்மானுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நன்றி:News18