பிரபல ஆங்கில நாளிதழ் ‘மிட் டே’ (Mid-Day) வெளியிட்ட விளம்பரம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் போலவே இருந்தது தெரியவந்துள்ளது. அந்த விளம்பரத்திலும் ஏர் இந்தியா நிறுவன விமானமே பயன்படுத்தப்பட்டிருந்தது. எதார்த்தமாக காலை வெளியான நாளிதழில் அந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், நண்பகல் வேளையில் நிதர்சனத்தில் அதேபோல் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.