இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி, தான் பார்த்ததில் சிறந்த கிரிக்கெட் மூளை கொண்ட இந்திய வீரராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவை குறிப்பிட்டுள்ளார். எம்.எஸ். தோனி உள்ளிட்ட பல முன்னணி வீரர்களை விட நெஹ்ராவின் கிரிக்கெட் புரிதல் மற்றும் ஆட்ட உத்திகள் சிறந்தவை என அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியுடன் விளையாடிய மொயின் அலி, முன்பு இந்தியாவின் சிறந்த வீரர்கள் பட்டியலில் தோனிக்கு முதலிடம் வழங்கியிருந்தார்.