விரைவில் சுமூக முடிவு.. பாமக ஜி.கே. மணி அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார். இருவருக்கும் இடையே கருத்து முரண் நீடித்து வரும் நிலையில், சமாதான முயற்சியாக இன்று (ஜூன் 5) சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து பேசிய பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி, "நல்ல சந்திப்பு. வரவேற்கக்கூடியது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இருவரும் மனம்விட்டு பேசி சுமூக முடிவு வேண்டும் என பல முயற்சி எடுத்துள்ளேன். இருவரின் சந்திப்பு காரணமாக பாமகவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். விரைவில் சுமூக முடிவு கிடைக்கும்" என தகவல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி