தவாக நிர்வாகி வெட்டி கொலை

மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்ட நிர்வாகியான மணிமாறன், மயிலாடுதுறை கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது, செம்பனார் கோவில் அருகே ஒரு கும்பல் அவரை வழிமறித்து வெட்டி கொலை செய்துள்ளனர். காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி கொலைவழக்கில் மணிமாறன் முக்கிய குற்றவாளி என்பதால், இது பழிவாங்கும் முயற்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி