கேரளாவில் வெஸ்ட் நைல்(West Nile) என்கிற கொசுக்களால் பரவும் புது வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே பரவி வரும் இந்தக் காய்ச்சல், தமிழகத்தில் இன்னும் பதிவாகவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்டுள்ளது. இது மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்றாலும் கூட ஆபத்தான வைரஸாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.