பீகார் மாநிலத்தில் "ALL INDIA PREGNANT JOB" என்ற பெயரில் ஒரு நூதன மோசடி அரங்கேறியுள்ளது. பெண்களின் புகைப்படங்களைக் காட்டி இளைஞர்களை ஈர்க்கும் ஒரு கும்பல், இதில் உறுப்பினராக இணைய ரூ.7.20 லட்சம் கட்டணம் வசூலிக்கிறது. பணம் செலுத்தி சேர்ந்த பின், பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி இக்கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.