வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறையால், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. மாநாட்டிர்கு 3 லட்சம் பேர் வருவார்கள் என கணித்துள்ள காவல்துறை, வாகன நிறுத்தத்திற்கு சுமார் 150 ஏக்கர் நிலம் தேவை எனவும் கணக்கிட்டுள்ளது. மாநாடு பார்க்கிங்-க்கு 45 ஏக்கர் மட்டுமே தேர்வு செய்துள்ள நிலையில், கூடுதல் இடங்களை பெற காவல்துறை தவெகவுக்கு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.