வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை நோக்கி செல்லும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் பிப்.18 முதல் 21-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்து வானிலை மையம் வழங்கும் தொடர் எச்சரிக்கைகளை கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி