நடிகர் கோவிந்தா வீட்டை சூழ்ந்த மர்ம கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்

பிரபல இந்தி நடிகர் கோவிந்தா, தனது வீட்டை சூழ்ந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பலை துப்பாக்கி முனையில் விரட்டியடித்ததாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தனது வீட்டின் மொட்டை மாடி வரை ஏறிய அந்த கும்பலை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தற்காப்பிற்காக தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை எச்சரித்ததாக கூறியுள்ளார். இது திட்டமிட்ட தாக்குதல் முயற்சியாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி