புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமர காட்டுப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்பட்டு வரும் குற்றவாளி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாரை ரவுடி துரை என்பவர் தாக்கியுள்ளார். அப்போது உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ரவுடி துரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக போலீசார் ரவுடியை துப்பாக்கியால் சுட்டனர். இதில், ரவுடி துரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.