மத்தியப் பிரதேசம் சிவபுரி மாவட்டம் அல்கி கிராமத்தில் பஞ்சாயத்து பவன் அருகே சாமியார் பிரஜேஷ் கிரி மகாராஜ் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் குளிரால் பொதுமக்களுடன் தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, அவர் அமர்ந்திருந்த மரக் கட்டிலிலேயே பின்னோக்கி சரிந்து விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.