ரூ.755.83 கோடி நிதியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்க அரசுக்கு பணம் உள்ளது, ஆனால், அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான சர்ஃபாக்டன்ட் மருந்து வாங்க பணமில்லையா? என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தவெகவினர், மருந்து முக்கியமா தங்க மோதிரம் முக்கியமா என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்றும் குழந்தைகள் உடல் நலத்துடன் வாழ உரிய மருத்துவமும் மருந்தும் தேவை என்பதை ஆட்சியாளர்கள் உணரும் நேரம் வந்துள்ளது என்றும் திமுக கூறியுள்ளது.