முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாநில மாணவரணி இணை செயலாளர் ஏ.பி.பி. பாண்டியன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் உடன் பயணித்து வந்த, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தனர். எம்.பி., தர்மர் அதிமுகவில் இணைந்தார். இந்த சூழலில் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுக, திமுக, தவெகவில் இணைந்து வரும் நிலையில், ஒருசிலர் மட்டுமே ஓபிஎஸ் உடன் இருக்கின்றனர். இதனிடையே தற்போது ஏ.பி.பி.பாண்டியன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னலையில் இணைந்துள்ளார்.