முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கோடை விடுமுறையை ஒட்டி குடும்பத்துடன் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.