சென்னை: SIR மூலம் தமிழகத்தின் உரிமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய வைகோ, “தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத்தவர்கள் வாக்களிக்கும் நிலை ஏற்படலாம். தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
நன்றி: PTI