செர்ரி பழம் நல்ல சுவையை மட்டுமல்லாது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் உள்ள அன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கூறுகள், தசை சோர்வு மற்றும் உடல் வலி போன்றவற்றை குறைக்க உதவும். செர்ரியில் உள்ள மெலடோனின், நல்ல தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய ஆரோக்கியம் மேம்பட்டு, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.